பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ வருகையாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

ரமோன் அல்கராஸ் மற்றும் டவோ டெல்சூர் ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக இலங்கை கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. மேற்படி கப்பல்களின் கட்டளைத்த தளபதி உள்ளிட்ட குழுவினர், தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாளை மறுதினம் வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ள குறித்த குழுவினர், கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளிலும் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.