யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வரும் பஸ் வண்டி உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் திடிர் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். வவுனியா புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீத தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதை பொருள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வவுனியா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு நேற்று முன்தினம் இரவு (25) மற்றும் நேற்று பகல் ஆகிய சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 15 கிலோ பெறுமதியான கேரளா கஞ்சாவை கடத்திய குற்றத்திற்காக அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அனுமதிபத்திரம் இன்றி கடத்தப்பட்ட தளபாடங்கள் செய்ய பயன்படும் மரக் குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கேரள கஞ்சா மற்றும் மரக் குற்றிகள் கடத்தப்பட்ட மூன்று பஸ்களையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.