Header image alt text

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் வவுனியா மாவட்ட பொதுமக்கள் இணைப்பு அலுவலகம் இன்று (28.01.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் நினைவில்லத்துக்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் உபதலைவர்களான வி.ராகவன், ஜி.ரி.லிங்கநாதன் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், சிரேஸ்ட உறுப்பினர்கள், நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

யாழ். தென்மராட்சி பகுதிகளில் சாவகச்சேரி பிரதேச சபை உபதலைவர் செ.மயூரன் மற்றும் முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும்,

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினரும், யாழ். மாவட்ட அமைப்பாளருமான பா.கஜதீபன், பல்வேறு மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றார். இதன் ஒரு அங்கமாக கொடிகாமம் மற்றும் கெற்பேலி கிராமங்களில் பொதுமக்களுடனான சந்திப்பு இடம்பெற்றதோடு, இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. Read more

உலகளாவிய ரீதியில் உயிர் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளார்.

இவர் இன்று முற்பகல் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

சீனாவின் வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் அனைவரையும் தியதலாவ இராணுவ முகாமில் வைத்து கண்கானிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொனோரா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாதுகாப்பான முறையில் தனி அறைகளில் அவர்களை வைத்த 2 வாரங்களுக்கு கண்கானிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனை, கருணைபுரத்தினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை பிள்ளையான் (64 வயது) என்பவரே இவ்வாறு குதித்து உயிரிழந்துள்ளார். Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்ட 61 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் இவர்களுக்கு விளக்கமறியல் இன்று நீடிக்கப்பட்டுள்ளது. நுவரேலியாவில் உள்ள தேசிய தௌஹீத் ஜமாத் தலைமைகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். Read more

பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் தயார்ப்படுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

கடந்த சில தினங்களில் நாட்டில் சில இடங்களில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் குறித்த விடயங்கள் வெளியாகின. இதன் காரணமாக இவர்களை அங்கொடையில் உள்ள ஐ.னு.ர்க்கு அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். Read more

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதலாவது நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சீனாவின் உபேயி பகுதியில் இருந்து நாட்டுக்கு வருகைதந்த சீன பெண் இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாக அறிகுறிகளுடன் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதான தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். Read more

இன்று காலை 6 மணி முதல் பயணிகளைத் தவிர ஏனையவர்கள் யாரும் விமான நிலைய வளாகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பயணிகளை தவிர்ந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எவரும் உட்செல்ல முடியாது. சீனாவில் இருந்து வரும் விமானங்களை வேறு ஒரு பகுதியில் தரையிறக்க திட்டமிட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத் தலைவர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

சீன பிரஜைகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வீசா வழங்கும் நடவடிக்கைளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நிலவும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து மீண்டும் அறிவிக்கும் வரையில் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. Read more