சீனாவில் கல்வி கற்கும் 204 இலங்கை மாணவர் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் அவர்கள் இலங்கையை வந்தடைவார்கள் என பதில் தூதுவர் கே.கே யோகநாதன் தெரிவித்துள்ளார். இதேவேளை சீனாவில் கல்வி கற்ற 50 மாணவர்கள் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். சைனா ஈஸ்டன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் அவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வருகை தந்த மாணவர்களின் சுகாதார நிலமை நன்றாக இருப்பதாக பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்படும் சந்தர்ப்பத்தில் சிகிச்சை வழங்குவதற்காக ஐடிஎச் மருத்துவமனை உட்பட 12 மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன.