சீன பிரஜைகளுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வீசா வழங்கும் நடவடிக்கைளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

நிலவும் அசாதாரண சூழ்நிலையை அடுத்து மீண்டும் அறிவிக்கும் வரையில் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. சீன பிரஜைகள் இலங்கை வந்ததற்கு பின்னர் வீசா பெற்றுக் கொள்வதே சாதாரணமாக இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தற்போது முதல் சீன பிரஜைகள் இலங்கை வந்த பின்னர் வீசா பெற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர்கள் சீனாவில் இருந்தே வீசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.