ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் வவுனியா மாவட்ட பொதுமக்கள் இணைப்பு அலுவலகம் இன்று (28.01.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், வவுனியா நகர சபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் நினைவில்லத்துக்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் உபதலைவர்களான வி.ராகவன், ஜி.ரி.லிங்கநாதன் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், சிரேஸ்ட உறுப்பினர்கள், நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.