Header image alt text

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைரஸ் தொற்றினை கட்டுபடுத்துவதற்கு பல்வேறு வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பயணிகள் இலங்கை வருகின்றனர். உயிரச்சுறுத்தலாக காணப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்கி வருவதோடு, இலங்கையிலும் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. Read more

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியலில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 12 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அலைபேசி குரல் பதிவுகள் தொடர்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறையில் உள்ள கைதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பான கஃபே மற்றும் மனித உரிமைகள் மத்திய நிலையம் ஆகியன இந்த கோரிக்கையின் எழுத்து மூலமான கடிதத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளன ஒருவர் சிறையில் இருப்பதால் அவருக்குள்ள வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியாது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை, மே 6ஆம் திகதி வரை மீண்டும் தடுப்புக் காவலில் வைக்குமாறு, கல்முனை நீதிமன்று உத்தரவிட்டது.

குறித்த வழக்கு, கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரை மீண்டும் மே 6ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார். Read more

இலங்கையில் பணிபுரியும் சீன பிரஜைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுக்களை இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார். Read more

இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களின் வசதி கருதி தூதரத்துக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.

இந்த சேவை 2020 ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. Read more

பாகிஸ்தான் கடற்படை மகளிர் அமைப்பின் தலைவரான ஷாஹீனா அப்பாஸி, வெலிசர கடற்படை முன்பள்ளி மற்றும் பகல்நேர பராமரிப்பு மையத்தை நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

பாகிஸ்தான் கடற்படை மகளிர் அமைப்பின் தலைவரான திருமதி ஷாஹீனா அப்பாசியை, இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவு தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்றனர். Read more

கெரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரியைச் சேர்ந்த நபர் ஒருவரின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வைத்தியசாலையின் பணிப்பாளர் அனோஜ் ருத்திகோ தெரிவித்துள்ளார்.

மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் குறித்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மற்றைய நோயாளிகள் இருக்குமிடத்திலிருந்து வேறுபடுத்தி வைத்து சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். Read more

சீனாவில் உயர்கல்வியைத் தொடரும் மாணவர்கள் 176 பேர் நேற்று இரவு நாட்டுக்கு புறப்பட்டதாக அந்நாட்டின் இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், 484 மாணவர்களை நாட்டுக்கு அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக சீனாவுக்கான இலங்கையின் பதில் தூதுவர் கே. யோகநாதன் கூறியுள்ளார். இதேவேளை, தடைகள் விதிக்கப்பட்டுள்ள வுஹான் நகரிலுள்ள இலங்கை மாணவர்களை அங்கிருந்து அழைத்துவர, சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சீனாவுக்கான பதில் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.