இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் ஒத்துழைப்புடன் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூலம் ஐக்கிய அரபு எமிரேட் ராச்சியத்தில் பணியாற்றும் இலங்கையர்களின் வசதி கருதி தூதரத்துக்கு இலவசமாக தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்த முடியும்.

இந்த சேவை 2020 ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கை தூதரக அலுவலகத்தின் சேவையை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோர் 800119119 என்ற தொலைபேசி இலக்கத்தில் எந்தவித கட்டணமும் செலுத்தாது தூதர அலுவலகத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.