கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைரஸ் தொற்றினை கட்டுபடுத்துவதற்கு பல்வேறு வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பயணிகள் இலங்கை வருகின்றனர். உயிரச்சுறுத்தலாக காணப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்கி வருவதோடு, இலங்கையிலும் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படும் எண்மர் இனங்காணப்பட்டுள்ளதோடு, இலங்கையர்கள் இருவரும் அதில் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காற்றினால் தொற்றக்கூடிய குறித்த வைரஸினை கொன்று வளி மண்டலத்தை சுத்தப்படுத்தும் கருவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளதோடு செயற்படுத்தப்பட்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.