கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்ப்பதற்காக நிறுவனங்களில் முறையான வேலைத்திட்டங்களை ஏற்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் துறைமுக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கம் கடிதம் ஒன்றின் மூலம், இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. தற்போதைய நிலைமையை தவிர்ப்பதற்காக கொழும்பு, திருகோணமழை மற்றும் காலி முதலான துறைமுகங்களில் முறையான சுகாதார பாதுகாப்புக்குரிய வலயமாக உறுதிப்படுத்துமாறு அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.