சீனாவில் ஹூபெய் மாநிலத்தின் வூஹான் நகரத்தில் தொடங்கிய கொரோனா கிருமித்தொற்று, சீனப் பெருநிலத்தின் அனைத்து மாநிலங்களுக்கும் வட்டாரங்களுக்கும் பரவியுள்ளது.

கிருமித்தொற்று ஏற்படுவதற்கும் அறிகுறிகள் தென்படுவதற்கும் இடைப்பட்ட காலம் – 1 முதல் 14 நாள்கள். இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதுடன் 9,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் 13பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 226 பேர் பாதிக்கப்பட்டதாகச் சந்தேகம் காணப்படுகின்து.

அத்துடன், அங்கு 164 பேருக்கு கிருமித்தொற்று இல்லையென ரத்தப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. ஏனைய நாடுகளில் 132 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய்லந்து – 14
ஜப்பான் – 14
ஹொங்கொங் – 15
தாய்வான் -9
மலேசியா – 8
மக்காவ் -7
அவுஸ்திரேலியா – 9
தென் கொரியா – 6
வியட்நாம் -5
அமெரிக்கா – 6
கனடா – 3
பிரான்ஸ் – 6
நேபாளம் -1
கம்போடியா -1
ஜெர்மனி – 5
இலங்கை – 1
ஐக்கிய அரபு இராச்சியம் – 4
பின்லாந்து – 1
இந்தியா – 1
பிலிப்பைன்ஸ் – 1
இத்தாலி – 2