கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வீதிக்கு அருகாமையில் நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த 18 கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எஸ்.எப்.ஜி. 87 ரக கைக்குண்டுகள் 16 மற்றும் 75 மில்லி மீட்டர் ரக கைக்குண்டுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டுகள் யுத்த காலத்தில் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டுகள் கிளிநொச்சி விசேட குண்டு செயலிழக்கும் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.