ஐரோப்பிய நாடுகளுள் மிகவும் சிறிய நாடான, லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர் ஜீன் என்சல் போர்ன் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.

நால்வர் அடங்கிய குழுவினருடன் வருகைத் தந்துள்ள இவர், புதுடில்லியிலிருந்து நேற்று இரவு 10.15 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல். 196 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இவரை வரவேற்பதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்டவர் விமான நிலையத்துக்குச் சென்றிருந்துள்ளனர்.