Header image alt text

திருகோணமலை, இறக்கக்கண்டி கடற்கரையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கற்களுக்கு இடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் சிலவற்றை கடற்படையினர் கண்டெடுத்துள்ளனர்.

இந்த வெடிபொருட்கள் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே கண்டெடுக்கப்பட்டுள்ளன. 20 வோட்டர் ஜெல் குச்சிகள், 4 பாதுகாப்பு ரவைகள் பின்னப்பற்றிருந்த நூல்கள், 2 மின்னை கடத்தாத டெடனேட்டர்கள் போன்றவையே கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வீதிக்கு அருகாமையில் நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த 18 கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எஸ்.எப்.ஜி. 87 ரக கைக்குண்டுகள் 16 மற்றும் 75 மில்லி மீட்டர் ரக கைக்குண்டுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டுகள் யுத்த காலத்தில் புலிகள் அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. Read more

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் நேற்று வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 11.00 மணியளவில் ஆரம்பமாகிய இப்பேரணி, பஜார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை அடைந்து, மீண்டும் பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. Read more

அதிக விலையில் முக கவசம் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக விலையில் முகக்கவசங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று (290 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோது பொதுமக்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. Read more

கொரோனா வைரஸ் தொற்றைத் தவிர்ப்பதற்காக நிறுவனங்களில் முறையான வேலைத்திட்டங்களை ஏற்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் துறைமுக பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர் சங்கம் கடிதம் ஒன்றின் மூலம், இலங்கை துறைமுக அதிகார சபைத் தலைவரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. Read more

சீனாவில் இருந்து இதுவரை 488 இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

அதேபோல் இன்றும் சீனாவில் உள்ள ஒரு தொகுதி மாணவர்களை இலங்கைக்கு அனுப்ப உள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவராலயத்தின் மேலதிக உயர்ஸ்தானிகர் கே.கே.யோகநாதன் தெரிவித்துள்ளார். Read more

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் வுஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், முதியவர்கள் உள்ளிட்டவர்கள் அதிக அளவில் இந்த வைரஸினால் பலியாகி உள்ளனர். Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைரஸ் தொற்றினை கட்டுபடுத்துவதற்கு பல்வேறு வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பயணிகள் இலங்கை வருகின்றனர். உயிரச்சுறுத்தலாக காணப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி மத்திய கிழக்கு நாடுகளையும் தாக்கி வருவதோடு, இலங்கையிலும் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. Read more

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விளக்கமறியலில் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 12 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அலைபேசி குரல் பதிவுகள் தொடர்பில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறையில் உள்ள கைதிகளுக்கும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுதந்திர மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பான கஃபே மற்றும் மனித உரிமைகள் மத்திய நிலையம் ஆகியன இந்த கோரிக்கையின் எழுத்து மூலமான கடிதத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளன ஒருவர் சிறையில் இருப்பதால் அவருக்குள்ள வாக்களிக்கும் உரிமையை பறிக்க முடியாது என்று தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.