Header image alt text

யாழ். நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (31.01.2020) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறபபு விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும், பொறியியலாளருமான வி.பராபரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். Read more

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காரினுள் கேரள கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நேற்றிரவு 10.00 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழிலிருந்து தென்பகுதி நோக்கி காரினுள் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கனகராயன்குளம் பொலிஸார் வீதியில் சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்திருந்தனர். Read more

சீனா – வூஹான் நகரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களில் 14 பேர் மருத்து பரிசோதனைகளை பூர்த்தி செய்துகொண்டதன் காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் தியதலாவை இராணு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே அவர்களது உறவினர்கள் பொறுப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று காலை 7.00 மணிமுதல் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பதிவு நடவடிக்கையும் முன்னெடுக்கப் படுகின்றது. திடீரென அமைக்கப்பட்ட இவ் சோதனை சாவடி காரணமாக குருமன்காட்டு சந்தியில் சற்று பதட்டமான நிலை காணப்படுவதுடன் மக்கள் அச்சத்துடன் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர். Read more

கொழும்பிலிருந்து பயணித்த லொறியொன்று இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி லொறியொன்று பயணித்த நிலையில் சாரதிக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டுள்ளது. Read more

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இன்று முதல் புதிய விமான சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

உள்நாட்டில் விமான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த விமான சேவை முன்னெடுக்கப்படுவதாக விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார். Read more

கடந்த ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் 9 மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நெரின் புளோரின் (26-வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். Read more

சீனாவின் வுஹான் நகரிலிந்து 33 இலங்கை வந்த மாணவர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யு.எல் 1423 ரக விமானம் இன்று காலை 7.42 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை மொத்தமாக 258 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more