சீனாவின் வுஹான் நகரிலிந்து 33 இலங்கை வந்த மாணவர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யு.எல் 1423 ரக விமானம் இன்று காலை 7.42 அளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கொரோனா வைரஸினால் சீனாவில் இதுவரை மொத்தமாக 258 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா பூராகவும் மொத்தமாக 11 ஆயிரம் பேர் வரையில் இத் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.