வவுனியா குருமன்காடு சந்தியில் இன்று காலை 7.00 மணிமுதல் இராணுவத்தினர் சோதனைச்சாவடி அமைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா – மன்னார் பிரதான வீதியூடாக பயணிக்கும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பதிவு நடவடிக்கையும் முன்னெடுக்கப் படுகின்றது. திடீரென அமைக்கப்பட்ட இவ் சோதனை சாவடி காரணமாக குருமன்காட்டு சந்தியில் சற்று பதட்டமான நிலை காணப்படுவதுடன் மக்கள் அச்சத்துடன் பயணத்தினை மேற்கொண்டு வருகின்றனர். ஊடகவியலாளர்கள் சோதனை நடவடிக்கையினை புகைப்படம், காணோளி எடுப்பதற்கு இராணுவத்தினர் தடை விதித்ததுடன் எடுக்கப்பட்ட காணொளிகளை அழிக்குமாறும் உத்தரவு பிறப்பித்திருந்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.