யாழ். நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (31.01.2020) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திருமதி சாந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறபபு விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும், பொறியியலாளருமான வி.பராபரன் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.