வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காரினுள் கேரள கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நேற்றிரவு 10.00 மணியளவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழிலிருந்து தென்பகுதி நோக்கி காரினுள் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கனகராயன்குளம் பொலிஸார் வீதியில் சோதனை நடவடிக்கையினை முன்னேடுத்திருந்தனர். இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காரினை மறித்து பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் காரினுள் 8 கிலோ 60 கிராம் கேரள கஞ்சாவினை வைத்திருந்த குற்றச்சாட்டில் காரின் சாரதியினை பொலிஸார் கைது செய்ததுடன் கேரள கஞ்சாவினையும் குறித்த காரினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட காரின் சாரதி ஹம்பாந்தோட்டை பகுதியினை சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை ஆயர்படுத்துவதற்குறிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.