Header image alt text

சீனா வுஹான் நகரில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டள்ளது.

மேலதிக சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் லக்ஷமன் கம்லன் தெரிவித்துள்ளார். குறித்த நபர்கள் தியத்தலாவ இராணுவ முகாமில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

அம்பாறை பொத்துவில் பகுதியில் சுவிடன் நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய 18 வயதுடைய இளைஞன் ஒருவரை இன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விடுமுறைக்கு சுற்றுலா வந்திருந்த பெண்ணே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 04, பம்பலப்பிட்டி லெஸ்டர் ஜேமீஸ் பீரிஸ் மாவத்தையில் இருந்து டிக்மன் சந்தியில் இருந்து ஹெவ்லோக் வீதிக்கு பிரவேசிக்கும் வீதியில் சில இடங்களில் நிலம் தாழ் இறங்கியுள்ளதால், இன்று மாலை அந்த வீதி போக்குவரத்து செய்ய முடியாதபடி முழுமையாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை ஊடாக வரும் வாகனங்கள் பொன்சேகா வீதி வழியாக ஹெவ்லோக் வீதிக்கு பிரவேசிக்க முடியுமென அறிவிக்கப்பட்டதுடன், காலி வீதிக்கு வருவோர் வழமை போல் ஆர்.ஏ.டி.மெல் வீதிக்கு ஊடாக வர முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் குடியேறுவதற்கு ஆர்வம் காட்டவில்லையென குற்றஞ்சாட்டிய யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, எனினும் மேலதிக காணிகளை விடுவிக்குமாறு கோருகின்றனரெனவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ் இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், வறியக்கோட்டுக்குட்பட்ட 100 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு, பலாலி பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக, கோபால் பாக்லே நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சு இதனை அறிவித்துள்ளது. இதனப்படையில் அவர் விரைவில் தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரியவருகின்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிய தரந்;ஜித் சிங் சந்து, அமெரிக்காவுக்கான இந்திய தூதுவராக பதவி ஏற்றுள்ள நிலையில், இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு புனானை ஓமனியாமடு காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை நேற்று முன்தினம் மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓமடியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வானம் பிரசாந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார். Read more

யாழ்ப்பாணம் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளையதினம் மின் தடை அமுலாக்கப்படவுள்ளது.

அதற்கமைய யாழ் மாவட்டத்தில் கலைவாணிச்சந்தி, கலைவாணி வீதி, கருவேற்புலம் ஆகிய வீதிகளிலும் வவுனியா மாவட்டத்தில் புதுக்குளம் கோவில்குளம் கிராமம், தந்திரிமலை, சின்ன சிப்பிக்குளம் போன்ற இடங்களிலும் காலை 8 -5 மணிவரை மின்சாரம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read more