மட்டக்களப்பு புனானை ஓமனியாமடு காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை நேற்று முன்தினம் மாலை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓமடியாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மயில்வானம் பிரசாந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த 25ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி ஓமடியாமடு காட்டுப்பகுதியில் ´சொட்கண்´ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன் குறித்த துப்பாக்கியையும் சடலத்துக்கு அருகில் இருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.