யாழ்ப்பாணம் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளையதினம் மின் தடை அமுலாக்கப்படவுள்ளது.

அதற்கமைய யாழ் மாவட்டத்தில் கலைவாணிச்சந்தி, கலைவாணி வீதி, கருவேற்புலம் ஆகிய வீதிகளிலும் வவுனியா மாவட்டத்தில் புதுக்குளம் கோவில்குளம் கிராமம், தந்திரிமலை, சின்ன சிப்பிக்குளம் போன்ற இடங்களிலும் காலை 8 -5 மணிவரை மின்சாரம் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக இந்த மின்சார தடை அமுலாக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.