Header image alt text

தெற்கு லண்டனில் அண்மையில் தீவிரவாத தாக்குதலை நடத்திய நபர் இலங்கையை பின்புலமாக கொண்டவர் எனத் தெரியவந்துள்ளது. 20 வயதான சுதேஸ் அமான் என்ற நபர், கத்தியைக் கொண்டு நடத்திய குறித்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அவரது தாயும், தந்தையும் இலங்கையை சேர்ந்தவர்கள் என டெய்லி மெய்ல் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேநேரம், அவர் ஏற்கனவே, இஸ்லாமிய தீவிரவாதம் குற்றம் ஒன்றுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. Read more

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகிலுள்ள டைக் பீஸ் பகுதியில் மூன்று இளைஞர்கள் நீராடச் சென்ற போது, ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாரென, துறைமுகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம், இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி மூன்று இளைஞர்களும் மரண வீட்டுக்குச் சென்று பின்னர் கடலில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். இதன்போது, ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். Read more

யாழ். அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து 5 வயது சிறுமி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

ஜெகதீஸ்வரன் அட்சயா (வயது 5) என்ற சிறுமியே உயிரிழந்தவராவார். முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமற்போயுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சிறுமியை தேடிய போது பாதுகாப்பற்ற கிணற்றில் காணப்பட்டுள்ளார். Read more

மன்னார் மாவட்டத்தின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதினால் விபத்துகள் அதிகமாக பதிவாகி வருகின்றது.

மன்னார்-யாழ்பாணம் பிரதான வீதி மற்றும் மன்னார் வவுனியா பிரதான வீதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கட்டாக்காலி கால்நடைகள் நடமாடுவதாக குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், நாளுக்கு நாள் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Read more

இராணுவத்தினரின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கத்தின் பிரதிநிதிகள், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் கமல் குணரத்விற்கும் இடையில் பாதுகாப்பு செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது விசேட தேவையுடைய இராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்ப உறவினர்களுக்கும் ஆயுட்காலம் வரை வேதனம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு பிடியாணை உத்தரவு பெற்று கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்தபோது, இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமையவே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

தொழில்வாய்ப்பற்ற சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். ராஜகிரிய, கோட்டே பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்த்தன உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார். Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ள கைதிகள் தொடர்பான பெயர்ப்பட்டியல் நீதியமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், குறித்த பெயர்ப்பட்டியல் ஜனாதிபதி செயலகத்துக்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. Read more

காவற்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹெமசிறி பெர்ணான்டோ எதிர்வரும் 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் உருவாகவுள்ள புதிய கூட்டணியின் பொதுச்செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.