வவுனியாவிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு – பொத்துவில் வரையான இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் முதன் முதலாக சேவையில் ஈடுபட்டுள்ளன.

இ.போ.ச. வவுனியா சாலையின் ஏற்பாட்டில் பயணிகளின் போக்குவரத்து வசதி கருதி இச் சேவை நேற்றுமுன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாலை 7.30மணிக்கு வவுனியாவிலிருந்து புறப்பட்டு இரவு 9.45க்கு திருமலையை அடைந்து இரவு 10.00 மணிக்கு திருகோணமலையிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 06.00 மணிக்கு பொத்துவில் பஸ் நிலையத்தை அடையும். அதேபோல் இரவு 10.00 மணிக்கு பொத்துவிலிருந்து புறப்படும் இ.போ.சபை பேரூந்து மறுநாள் காலை 7.00 மணிக்கு வவுனியாவை அடையும்.