ரஷ்யாவின் தரைதோற்ற செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதானி ஒலேக் சல்யுகோவ் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டுஇலங்கை வந்தடைந்துள்ளார்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளார். அதேபோல் சுதந்திரன தின நிகழ்வில் விசேட அதிதியாகவும் அவர் பங்கேற்கவுள்ளார். அத்துடன் இலங்கை இராணுவம் ஒழுங்கு செய்துள்ள பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் கலந்துக்கொள்ளவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.