தெற்கு லண்டனில் அண்மையில் தீவிரவாத தாக்குதலை நடத்திய நபர் இலங்கையை பின்புலமாக கொண்டவர் எனத் தெரியவந்துள்ளது. 20 வயதான சுதேஸ் அமான் என்ற நபர், கத்தியைக் கொண்டு நடத்திய குறித்த தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அவரது தாயும், தந்தையும் இலங்கையை சேர்ந்தவர்கள் என டெய்லி மெய்ல் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேநேரம், அவர் ஏற்கனவே, இஸ்லாமிய தீவிரவாதம் குற்றம் ஒன்றுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னர், காவல்துறையினரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.