மன்னார் மாவட்டத்தின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதினால் விபத்துகள் அதிகமாக பதிவாகி வருகின்றது.

மன்னார்-யாழ்பாணம் பிரதான வீதி மற்றும் மன்னார் வவுனியா பிரதான வீதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கட்டாக்காலி கால்நடைகள் நடமாடுவதாக குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், நாளுக்கு நாள் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குறித்த விடயம் தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்குள் அதிகமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இரவு நேரங்களில் கடுமையான பனி பொழிகின்ற காரணத்தினால் விலங்குகள் கண்ணுக்கு தெரியாத நிலைக் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டாக்காலி விலங்குகள் தொடர்பாக பிரதேச சபை மற்றும் நகரசபை ஆகியன அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வாகன சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.