Header image alt text

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கா இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோ (Michael R. Pompeo) விடுத்துள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்துவதே தமது எதிர்பார்ப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஜனநாயகத்தை மதிக்கும் பண்பை கொண்டிருப்பதாகவும், இலங்கையின் இறையாண்மைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். Read more

இளைஞர் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதேச செயலாளர் மட்டத்தில் இத் தேர்தல் நடைபெறும்.

18 – 27 வயது வரையறைக்கு உட்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்தியவர்கள் இளைஞர் பாராளுமன்றத்துக்காக வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும். வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் இளைஞர் யுவதியினர் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவில் 3 வருட காலம் குடியுரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும். Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1079 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது.

இன்று இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதி மறுக்கப்பட்ட நாட்டில் சுதந்திர தின கொண்டாட்டம் எதற்கு என்கின்ற தொனிப்பொருளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். Read more

முல்லைத்தீவு – நாயாற்று பகுதியில், நேற்று இரவு, கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடும் கடற்றொழிலாளர் ஒருவரின் வாடிகள், இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

நாயாற்று பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர், வாடி அமைத்து கடற்றொழிலுக்காக புத்தளத்தில் இருந்து வேலைக்கு ஆட்களை வைத்து கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட வேளையிலேயே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அங்கு தங்கியிருந்த 717 இலங்கையர்களை தற்போதைய நிலையில் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன் பதில் தூதுவர் கே.கே.யோகநாதன் இதனை தெரிவித்துள்ளார். மேலும் 10 மாணவர்கள் இன்று இரவு இலங்கை வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். Read more

இலங்கையின் 72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்தர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பிக்கபட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் தேசிய சுதந்தர தின நிகழ்வுக்கு ஜனாதிபதி வரவேற்கப்பட்டுள்ளார். இம்முறை சுதந்திர தின நிகழ்வில் 2,500 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். Read more

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்யாவின் இராணுவத் தளபதி ஒலேக் சல்யகோவ், பாதுகாப்பு செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாகவும், பிராந்திய மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை பற்றி கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. Read more

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது ஆகும். சார்ஸ் நோயின் பலி எண்ணிக்கையை விட கொரோனாவின் பலி எண்ணிக்கை அதிகம் ஆகும்.

கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் யாரும் எதிர்பார்க்காத வேகத்தை எடுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் கொரோனா வைரஸ் காரணமாக 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் காரணமாக 10,400 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். Read more

வடக்கில் ஏ-9 வீதியை மையப்படுத்தி போதைப் பொருள் கடத்தலை காரணமாகக்காட்டி மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர் சோதனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பாக ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. Read more