சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சார்ஸை விட கொடூரமானது ஆகும். சார்ஸ் நோயின் பலி எண்ணிக்கையை விட கொரோனாவின் பலி எண்ணிக்கை அதிகம் ஆகும்.

கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் யாரும் எதிர்பார்க்காத வேகத்தை எடுத்துள்ளது. கடந்த 2 நாட்களில் கொரோனா வைரஸ் காரணமாக 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2 நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் காரணமாக 10,400 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர்.தற்போது இதன் மொத்த எண்ணிக்கை 20,400 ஐ தொட்டு இருக்கிறது. அவ்வளவு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அதேபோல் கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. சார்ஸ் மற்றும் கொரோனா இரண்டும் ஒரே வகை கொரோனா குடும்ப வைரஸ்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவ வெளவால் ஒரு வகையில் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் வெளவால்கள் தான் கொரோனா குடும்ப வைரஸ்கள் சிலவற்றை இதற்கு முன் உருவாக்கியது. உதாரணமாக சார்ஸ் நோய் ஒரு வகை கொரோனா வைரஸ் மூலம் உருவானது. இது உருவாக காரணம் வெளவால் தான்.

இந்த சார்ஸ் மூலம் மொத்தமாக 5,327 பேர் பாதிக்கப்பட்டார்கள். இதன் மூலம் 349 பேர் பலியானார்கள். முதலில் சார்ஸ் அளவிற்கு கொரோனா வேகமாக இல்லை. ஆனால் இப்போது அதைவிட வேகமாக கொரோனா பரவ தொடங்கி உள்ளது. பிளேக் மற்றும் எச் 1 என் 1 வைரஸ்கள் தான் உலகில் மிகவும் வேகமாக பரவிய வைரஸ்கள் ஆகும்.

தற்போது அந்த வைரஸ்களின் வேகத்திற்கு இணையாக இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. பலி எண்ணிக்கையின் அடிப்படையில் சார்ஸை கொரோனா முந்திவிட்டது. கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். உலகம் முழுக்க 22 நாடுகளில் இந்த வைரஸ் தாக்குதல் ஏற்ப்பட்டுள்ளது. சார்ஸ் வைரஸ் 12 நாடுகளை மட்டும் தான தாக்கியது. இதன் மூலம் சார்ஸ் வைரஸை விட மிகவும் கொடுமையான வைரஸ் கொரோனாதான் என்று உறுதி செய்யப்பட்டும் இருக்கிறது.