இளைஞர் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதேச செயலாளர் மட்டத்தில் இத் தேர்தல் நடைபெறும்.

18 – 27 வயது வரையறைக்கு உட்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தி எய்தியவர்கள் இளைஞர் பாராளுமன்றத்துக்காக வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும். வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் இளைஞர் யுவதியினர் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவில் 3 வருட காலம் குடியுரிமையைக் கொண்டிருத்தல் வேண்டும். வேட்பாளரின் தாய் அல்லது தந்தை அல்லது சகோதரர் பொது மக்கள் பிரதிநிதியாக செயற்படுவாராயின் அவ்வான ஒருவர் இளைஞர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்று இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவித்துள்ளது.