இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்யாவின் இராணுவத் தளபதி ஒலேக் சல்யகோவ், பாதுகாப்பு செயலாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையில் நிலவும் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்தும் விடயங்கள் தொடர்பாகவும், பிராந்திய மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களை பற்றி கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.இந்த சந்திப்பின் நிறைவில் குறித்த சந்திப்பை நினைவுபடுத்தும் முகமாக இருவர்களுக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.