இலங்கையின் 72 வது தேசிய சுதந்திர தின நிகழ்வு தற்போது கொழும்பு சுதந்தர சதுக்க வளாகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு ஆரம்பிக்கபட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் தேசிய சுதந்தர தின நிகழ்வுக்கு ஜனாதிபதி வரவேற்கப்பட்டுள்ளார். இம்முறை சுதந்திர தின நிகழ்வில் 2,500 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். முப்படையினரின் அணிவகுப்பு, கண்கவர் கலாசார நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரிக்கின்றன.

முப்படை அணிவகுப்பில் 4,325 பேர் கலந்து கொள்ளும் அதேவேளை, கடற்படையின் அணி வகுப்பில் 868 உறுப்பினர்களும், விமான படையின் 815 உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர். 1,382 பொலிஸாரும் 515 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்துகொள்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.