Header image alt text

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சமன் ரத்னபிரிய இன்று பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன பதவி விலகியதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே சமன் ரத்னபிரிய இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலைக் குற்றம் புரிந்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் அழைக்கப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரஸ், Read more

கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்களுக்காக ஜனாதிபதி செயலகம் முன்பாக காலி முகத்திடலில் தனியானதொரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. குறித்த இடமானது இதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தை நிறுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் என்றும் கூறப்படுகிறது. Read more

அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலத்தில் இராணவத்திலிருந்து விலகிச் சென்றவர்கள் ஆயுதங்களை மீளக் கையளிக்க முடியுமென தெரிவித்த இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க, ஆயுதங்களை கையளிக்காதோர் கைதுசெய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள இராணுவ ஊடக மய்யத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இம்மாதம் 5 ஆம் திகதி முதல் 12 திகதி வரையான பொது மன்னிப்புக் காலப்பகுதியில், இராணுவத்திலிருந்து முறையற்ற விதத்தில் விலகிச் சென்றவர்கள் மீண்டும் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். Read more

பதுளையில் கொரோனா வைரஸ் தொற்று என்று சந்தேகிக்கப்படும் அறிகுறிகளுடன் யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனாவின் யுன்ஹாய் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் குறித்த யுவதி சில தினங்களுக்கு முன்பே இலங்கையை வந்தடைந்துள்ளார். மொனாராகலையைச் சேர்ந்த இவர், பதுளை வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கான சிகிச்சைப் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொனோரா வைரஸ் தொடர்பில் யாழ் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் து. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதி தொடர்பாக இன்று யாழ். போதனா வைத்தியசாலையில், வைத்திய நிபுணர்கள் மத்தியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். Read more

யாழில் மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். புகையிரத நிலைய வீதி பகுதியில் வசித்துவரும் சிவரூபன் றிஸ்வினி (17) எனும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த மேற்படி மாணவியின் சடலம் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா – கண்டி வீதியில் இன்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தாய் ஒருவர் பலியானதுடன் மாணவன் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியுடாக பயணித்து கொண்டிருந்த இரு துவிக்கரவண்டிகள் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானது. Read more

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே அறிந்திருந்தும் தகவல்களை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பமைச்சின் முன்னாள் செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை பிணையில் விடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more

யால தேசிய பூங்காவிற்கு பிரவேசிப்பதற்காக மின்னணு நுழைவுச் சீட்டினை வெளியிடும் முறையொன்றை அறிமுகப்படுத்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜீ.சி.சூரிய பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார். இன்று முதல் இணையத்தின் ஊடாக இந்த நுழைவுச் சீட்டு வெளியிடும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். Read more