கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்களுக்காக ஜனாதிபதி செயலகம் முன்பாக காலி முகத்திடலில் தனியானதொரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. குறித்த இடமானது இதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தை நிறுவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் என்றும் கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக கடந்த வாரம் பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினமும் உயர் தொழில்நுட்ப டிப்ளோமா மாணவர்களின் போராட்டமொன்று இடம்பெற்று வருகிறது.