வவுனியா – கண்டி வீதியில் இன்று மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் தாய் ஒருவர் பலியானதுடன் மாணவன் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்திற்கு முன்பாக பட்டா ரக வாகனத்தினை சாரதி பின்நோக்கி செலுத்திய சமயத்தில் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வவுனியா நகரிலிருந்து கண்டி வீதியுடாக பயணித்து கொண்டிருந்த இரு துவிக்கரவண்டிகள் மீது மோதுண்டு விபத்துக்குள்ளானது. விபத்தில் துவிச்சக்கர வண்டியில் தனது 7 வயது பாடசாலை மாணவனை ஏற்றிச்சென்ற இளம் தாய் உட்பட பாடசாலை மாணவனும் மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ச.புஸ்பராணி (வயது 36) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.