Header image alt text

யாழ். அச்சுவேலி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்றையதினம் (05.02.2020) நடைபெற்றது. இதன்போது புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட

கிராம எழுச்சி விசேட நிதியினூடாக (ரூபா 1,000,000/-) நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு மைதான சுற்றுமதிலும் தர்மலிங்கம் சித்தார்த்தன்(பா.உ) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read more

புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக (ரூபா 2,000,000/-)

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலய சுற்றுவீதி புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 03.02.2020 அன்று தர்மலிங்கம் சித்தார்த்தன் (பா.உ) அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Read more

யாழ். போக்கட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல திறனாய்வு நிகழ்வு இடம்பெற்றபோது,

அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். Read more

இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர் தெரிவித்துள்ளார்.

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஹார்விட் ஷேபர இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்ததன் பின்னர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்தோடு இலங்கை தற்போது தெற்காசியாவில் உயர் மனித அபிவிருத்தி சுட்டியுடன் கூடிய நடுத்தர வருமானம் பெறும் நாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

இங்கிலாந்து டச்சஸ் ருட்லான்ட் அரச பிரதானி பிலிப் புருட், ஜேர்மனியை சேர்ந்த சில்ஷயா ரெப்ரிச், ரயினா மெலோர் ஆகியோரின் குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேச சபைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இவர்கள் மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினருக்கு பாதுகாப்பு அங்கிகள் ஒரு தொகுதியினை முதல் கட்டமாக மாநகர முதல்வர் எஸ்.சரவணபவன் மற்றும் மாநகர ஆணையாளர் எஸ்.சித்திரவேல் ஆகியோரிடம் மாநகர சபையில் வைத்து கையளித்தனர். Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை இந்தியா செல்லவுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் பிரதமர் குறித்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

இவ் விஜயத்தின் போது இந்திய பிரதமர் மோடி, இந்திய ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட இந்தியாவின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அரச அதிபராக முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்கவை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது.

முன்னதாக திருமலை அரச அதிபராக கடமைபுரிந்த புஷ்பகுமார சேவையிலிருந்து ஓய்வுபெற்று சென்றதையடுத்து மேலதிக அரச அதிபரான அருந்தவராஜா பதில் அரச அதிபராக கடமையாற்றிவருகிறார். Read more

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர்கள் இன்று காலை சரணடைந்தனர்.

அதனையடுத்து, கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவுசெய்தனர். Read more

சீனாவில் கல்விகற்று அண்மையில் நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவி, கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை வடமாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் ஆர்.கேசவன் நேற்று தெரிவித்தார். மேலும், சீனாவில் மருத்துவத் துறையில் படித்த ஒரு மாணவி கடந்த மாதம் 28ம் திகதி வவுனியாவிற்கு வருகை தந்திருந்தார். Read more

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் காயங்களுடன் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுணதீவு ஆயித்தியமலை மூன்றாம் கட்டை பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 55வயதான மட்டக்களப்பு, புதூர் 7ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more