யாழ்ப்பாணம் கொடிகாமம் நெல்லியடி வீதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் 74 வயதுடைய துன்னாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த இராஜேஷ்வரன் ரதன் என்ற இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக வேகமே விபத்துக்கான காரணம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.