திருகோணலை கொழும்பு வீதியின், தம்பலகாமம் பகுதியில் 99ஆம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் இன்று அதிகாலை மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் திருகோணமலை, கந்தளாய் மற்றும் தம்பலகாமம் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.