பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியலை தொடர்ந்தும் நீடிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ரிப்கான் பதியுதீன் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை பெப்ரவரி 20 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். தலைமன்னார் பகுதியில் உள்ள 24 மில்லியன் பெறுமதியான 40 ஏக்கர் நிலம் ஒன்றிற்கு போலி உறுதிப்பத்திரம் தயாரித்து மோசடி செய்ததாக ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.