சீனாவில் கல்விகற்று அண்மையில் நாடு திரும்பிய வவுனியாவைச் சேர்ந்த 23 வயதுடைய மாணவி, கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனை வடமாகாண சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் ஆர்.கேசவன் நேற்று தெரிவித்தார். மேலும், சீனாவில் மருத்துவத் துறையில் படித்த ஒரு மாணவி கடந்த மாதம் 28ம் திகதி வவுனியாவிற்கு வருகை தந்திருந்தார். இப் பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வுஹான் மாகாணத்திற்கு தொலைவில் உள்ள மாகாணத்தில் வாசித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாகாணங்களில் இருந்து வந்தவர்களை மட்டும் நாங்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து தியத்தலாவைக்கு அனுப்பியிருந்தோம்.

ஏனைய மாகாணங்களில் இருந்து வந்தவர்களை அவர்களுக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்களை அரசாங்கம் வீடுகளுக்கு அனுப்பியிருந்தது. ஆனால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.

கடந்த இரண்டு நாளைக்கு முன் அறிகுறி (காய்ச்சல், தடிமன்) இருந்ததை குறித்த மாணவி அறிந்துகொண்டதை அடுத்து குறித்த மாணவி வவுனியா வைத்தியசாலைக்கு நேற்றுக்காலை சென்று இதுகுறித்து கூறியுள்ளார்.

இதையடுத்து வவுனியா வைத்தியசாலைலில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளோம் என கூறியுள்ளார்.