ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர்கள் இன்று காலை சரணடைந்தனர்.

அதனையடுத்து, கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவுசெய்தனர். பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்த போது, இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.