Header image alt text

திருகோணமலை பாலம்போட்டாறு பகுதியில், லொறியின் உதவியாளரைத் தீ மூட்டி கொலைசெய்த குற்றச்சாட்டின்பேரில் தேடப்பட்டு வந்த சாரதியை, மன்னாரில் வைத்து நேற்றிரவு கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர், திருகோணமலை-மிகிந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி யோகநாதன் (47 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். Read more

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியலை தொடர்ந்தும் நீடிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ரிப்கான் பதியுதீன் கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே அவரை பெப்ரவரி 20 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட பாலைப்பாணி கிராமத்தில் கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருகையில், இன்று காலை கிளிநொச்சியினை சேர்ந்த 48 வயதுடைய பாலராசா ஜெதீஸ்வரன் என்ற விவசாயி தனது வயலினை அறுவடை செய்வதற்காக சென்றுள்ளார். இதன்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். Read more

சீனா வுஹான் நகரில் முதலில் பரவ ஆரபித்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 564 பேர் இறந்துள்ளதாகவும், 27,649 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும், மேலும் 3,323 பேர் கவலைகிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை நேற்றையதினத்தில் மட்டும் 72 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை பிரித்தானிய மருத்துவர் கண்டுபிடித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. Read more

ரஷ்ய இராணுவ தளபதி சல்யுகோ ஒலேக் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

கடந்த 3ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த அவர், 72ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார். ஜெனரல் ஒலேக்வுடன் இலங்கைக்கு வருகை தந்துள்ள ரஷ்ய இராணுவத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். Read more

16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்தின் துணை நிரந்தர பிரதிநிதி எம்மா ப்ரிகாம் மற்றும் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வா ஆகியோருக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. Read more

தபால் திணைக்களம் கடிதங்களை விநியோகிப்பதற்காக தபால் ஊழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்கவுள்ளது. இதற்காக அமைச்சரவை ஆவணம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தபால் சேவையை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுக்க முடியும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். Read more

திருகோணலை கொழும்பு வீதியின், தம்பலகாமம் பகுதியில் 99ஆம் சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் தனியார் பஸ்ஸொன்றும் இன்று அதிகாலை மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

யாழ்ப்பாணம் கொடிகாமம் நெல்லியடி வீதியில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் 74 வயதுடைய துன்னாலையைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 21 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த இராஜேஷ்வரன் ரதன் என்ற இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக வேகமே விபத்துக்கான காரணம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

திருகோணமலை பாலம்பட்டார் பகுதியில் தீ பரவிய லொறியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டது தொடர்பில் குறித்த லொறியின் சாரதி நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 01ம் திகதி திருகோணமலை பாலம்போட்டார் பாலத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் தீ பரவியதாக பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். Read more