அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக இராஜாங்க அமைச்சர் லசந்த மீண்டும் இன்று ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவின் பெயரை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி வழிமொழிந்தார். பாராளுமன்றக் கூட்டத்ததொடர் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 2ம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட முன்னரும் இவர் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக செயற்பட்டிருந்தார்.பாராளுமன்றத்தில் இன்று கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக்க, சந்திம வீரக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர்களான உதய பிரபாத் கம்மன்பில, அலிசாஹிர் மௌலானா, டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் விஜயபால ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.