சீனாவில், கொரோனா கிருமித்தொற்றுக் குறித்து முன்கூட்டியே எச்சரித்த மருத்துவர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளார்.

அவர் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனை இன்று காலை அதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலகளவில் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடிய கொரோனா கிருமியைப் பற்றி டாக்டர் லீ வென் லியாங் இதற்கு முன்னர் எச்சரித்தார். ஆனால், அவ்வாறு செய்ததற்காக உள்ளூர்க் பொலிஸார் அவருக்குக் கண்டனம் விடுத்திருந்தனர். இதற்கு முன், அவரது மரணம் குறித்து மாறுபட்ட தகவல்கள் வந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்தியை வூஹான் நகர மத்திய மருத்துவமனை உறுதிப்படுத்தியது. சீன சமூக ஊடகங்களில் பலரும் அவருக்கு அஞ்சலி தெரிவிக்கின்றனர்.