இரத்தினபுரி பிரதான பொது வைத்தியசாலைக்கு, பெருந்தொகையான முகக்கவசம் (ஆயளம) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் சேவையாளர்களின் நலன் கருதியே, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவால், பெருந்தொகையான முக பாதுகாப்பு கவசம், நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டது. மேற்படி வைத்தியசாலையில், 1,400 நோயாளிக்கான கட்டில்கள் உள்ளதுடன், நாளாந்தம் 3,000 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைத்தியசாலையில், விசேட வைத்திய நிபுணர்கள் 56 பேரும், ஏனைய வைத்தியர்கள் 185 பேரும், தாதியர்கள் 750 பேரும், சேவையாளர்கள் 1,100 பேரும் சேவையாற்றி வருகின்றனர். மேற்படி வைத்தியசாலையானது, 65 ஏக்கர் நில பரப்பளவை கொண்டதும் குறிப்பிடத்தக்கது.