அரச சேவைகளில், பயிற்சியாளர்களாகப் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், மார்ச் 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே இவ்வாறு அங்கிகாரமளிக்கப்பட்டு உள்ளதெனத் தெரிவித்த அவர், அவ்வாறனவர்களுக்கு ஒரு வருடகாலம் பயிற்சியும் தலைமைத்துவ பயிற்சியும் வழங்கப்படும் என்றும் சேவைக்கு இணைத்துக்குக் கொள்ளப்பட்டதன் பின்னர், ஐந்து வருடங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார்.

அத்துடன் 2012ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரையில் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறி தொழில் வாய்ப்பின்றி இருக்கும் சுமார் 50,000 இளைஞர் – யுவதிகளை, அரச சேவையில் ஈர்ப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.