முன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரன்கொடவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இவ்உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கினை விசாரிக்க நியமிக்கப்பட்ட மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று நோட்டிஸ் விடுத்துள்ளது.முன்னதாக இரு தடவைகள் நோட்டீஸ் விடுக்கப்பட்ட நிலையில் இன்றும் அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து, கடற்படை தளபதி மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் ஊடாக வசந்த கரன்னாகொடவுக்கு நோட்டீஸ் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள 13 கடற்படை அதிகாரிகள் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். அத்துடன், வழக்கு விசாரணை எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.