Header image alt text

“13  ஐ ஒழிப்பதே கோத்தாவின் நோக்கம்!”

புளொட் அமைப்பின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் , சமகால அரசியல் நிலை குறித்து  ‘சஞ்சீவிக்காக’ வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இது.

கே: எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் உங்களது கட்சி சார்­பில் நீங்­க­ளும், மாகா­ண­சபை முன்­னாள் உறுப்­பி­னர் பா.கஜ­தீ­ப­னும் கள­மி­றங்­க­வுள்­ளீர்­கள் எனத் தகவல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. கஜ­தீ­ப­னுக்கு ஆச­னம் வழங்­கி­யமை தொடர்­பில் தங்­கள் கட்­சி­யின் மூத்த உறுப்­பி­னர்­கள் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. உங்­களது கட்­சிக்­குள் என்­ன­தான்  நடக்­கின்­றது? Read more

யாழ். இணுவில் கந்தசுவாமி கோவிலின் உலகப்பெரு மஞ்சமானது தைப்பூச திருநாளாகிய இன்றையதினம் (08.02.2020) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கார்ப்பெட் வீதியில் வலம் வருகின்றது.

பக்த கோடிகளின் கோரிக்கைக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களது முயற்சியினால் முன்னாள் பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் விசேட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ரூபா இரண்டு கோடி எண்பது லட்சத்தில் இவ்வீதி புனரமைக்கப்பட்டது. இவ்வீதியானது இன்றையதினம் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. Read more

முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இன்று சிலாவத்தை மாதிரி கிராமம் பகுதியில் இருந்து வியாபாரத்திற்கு என அபாயகரமான வெடி பொருட்களை எடுத்து வந்து கழட்டி விற்பனை செய்வதற்கு முற்பட்ட வேளையில் மோட்டார் வகையான ஒரு குண்டு வெடித்து சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மோசமான முறையில் பகிடிவதையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்குள்ளாகிய

மூத்த மாணவன் ஒருவருக்கு மறுஅறிவித்தல் வரை பல்கலைக்கழக கற்கைநெறிகளில் ஈடுபடவோ, வளாகங்களுக்குள் நுழையவோ முடியாதவாறு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read more

ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று யாழ் அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அரியாலை இராஜேஸ்வரி வீதியில் வசித்துவந்த நகுலேஸ்வரன் நிரோஜினி (31-வயது) எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இன்று வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். கணவரும், தாயாரும் வேலைக்காக சென்றுவிட மகன் கல்வி நிலையத்திற்கு சென்றிருந்த சமையத்தில் குறித்த பெண் தனித்திருந்த சமையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Read more

வதிவிடத்தை உறுதி செய்வதற்காக கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்படும் சான்றிதழ் பிரதேச செயலாளரினால் உறுதி செய்யப்படுவது அவசியம் அல்ல என்று அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்களால் வழங்கப்படும் வதிவிட மற்றும் நற்சான்று பத்திரங்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் பிரதேச செயலாளரின் கையொப்பம் தேவைப்படாதென அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவை சென்றடைந்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ புத்தகயா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அதேநேரம், எதிர்வரும், 11 ஆம் திகதி குறித்த இந்திய விஜயத்தினை நிறைவு செய்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாடு திரும்பவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கோப் குழு தலைவராக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த பதவிக்கு இவர் மூன்றாவது முறையாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்று பிற்பகல் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற இதுதொடர்பான கூட்டத்தில் அரச கணக்குக்குழு மற்றும் கோப் குழுவுக்கான புதிய தெரிவுகளும் இடம்பெற்றன. Read more

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20ம் திகதிவரை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த விண்ணப்பங்களுக்கான கால எல்லையை 20 வரை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அம்பாறை திருக்கோவில் பகுதியின் பெரியகளப்பு தம்பட்டை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா தவராசா என்பவரே நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார கூறியுள்ளனர்.

மேலதிக விபரங்கள் தெரியவராத நிலையில் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.