ஒரு பிள்ளையின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் இன்று யாழ் அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அரியாலை இராஜேஸ்வரி வீதியில் வசித்துவந்த நகுலேஸ்வரன் நிரோஜினி (31-வயது) எனும் ஒரு பிள்ளையின் தாயாரே இன்று வீட்டினுள் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். கணவரும், தாயாரும் வேலைக்காக சென்றுவிட மகன் கல்வி நிலையத்திற்கு சென்றிருந்த சமையத்தில் குறித்த பெண் தனித்திருந்த சமையத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சடலம் காணப்பட்ட இடத்தில் கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.’ என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் அப்பாவிடம் செல்கிறேன் எனவும் கணவர், தாய் ஆகியோரிடமும் மன்னிப்புக் கேட்டும் மகனை நன்றாக பார்க்குமாறும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.