வதிவிடத்தை உறுதி செய்வதற்காக கிராம உத்தியோகத்தரினால் வழங்கப்படும் சான்றிதழ் பிரதேச செயலாளரினால் உறுதி செய்யப்படுவது அவசியம் அல்ல என்று அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்களால் வழங்கப்படும் வதிவிட மற்றும் நற்சான்று பத்திரங்களுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதியின் பின்னர் பிரதேச செயலாளரின் கையொப்பம் தேவைப்படாதென அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர்களின் கையொப்பத்தை பெறுவதற்காக செல்லும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை கருத்திற் கொண்டு அரசாங்கம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
பிரதேச செயலகத்தினால் கிராம உத்தியோகத்தர், வதிவிட சான்றிதழ் புத்தகம் மற்றும் நற்சான்றிதழ் புத்தகத்தின் மூலம் இந்த சான்றிதழ்கள் கிராம உத்தியோகத்தரினால் முத்திரையிடுவது மாத்திரம் போதுமானதென அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர் பிரிவின் பெயர் மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவின் பெயர் உள்ளடக்கிய உத்தியோகபூர்வ முத்திரை ஒன்று தயாரித்து வைத்திருக்க வேண்டும். இது தயாரிக்கப்படாத பட்சத்தில் தற்பொழுது பயன்படுத்தப்படும் உத்தியோக பூர்வ முத்திரையை பயன்படுத்த முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது.